கனிமரமாக இருங்கள்!
குணசேகரனின் ஆட்டோவில் எப்போதும் ரஜினி பாட்டுத்தான். ஆட்டோவின் பின்புறத்தில் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தான். ஆட்டோ ஸ்டாண்டில் அவனை ‘ரஜினி குணா’ என்றுதான் எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை படம் வந்தபோது இருந்த ரஜினியின் ஹேர் ஸ்டைல்தான் குணாவிற்கும். நெற்றியில் பட்டை பட்டையாய் விபூதி. பிரகாசமான சிரிப்பு.
சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தொன்றில் அவன் வலது காலில் பலத்த காயம். அப்போது முதல் அவன் சற்றே தாங்கித்தான் நடப்பான். ஆனாலும் முன்பிருந்ததை விட அந்த விபத்திற்குப்பின் இன்னும் கொஞ்சம் கூடுதல் சுறுசுறுப்பு சேர்ந்து கொண்டது.
தன் ஆட்டோவில் வரும் வாடிக்கையாளர்களிடம் அவன் கூடுதலாகக் காசு கேட்டுத் தொந்தரவு செய்வதில்லை. பார்த்த சில நிமிடங்களிலேயே பல வருடங்களாகத் தெரிந்தவர்போல் கலகலப்பாகப் பேசிப்பழகுவான் ரஜினி குணா.
குணாவிற்கு ஒரே மகன். இந்தாண்டு எட்டாம் வகுப்பு. “புதன்கிழம தான்பா ஸ்கூல் ஃபீஸ் கட்ட லாஸ்ட் டே” என இருதினங்களுக்கு முன் மகன் சொன்னது முதலே அவனைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. திடீரெனப் பள்ளியில் கட்டணத்தை அதிகரித்திருந்தனர். இரண்டு நாள்களாய்த் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தான்.
அட ராமா…