இந்த ஆண்டு நாள்தோறும் எழுதப் பழகியிருக்கிறேன். எனது துறை டிஜிட்டல் தொழில்நுட்பம். எனவே ‘என்ன எழுதலாம்’ என்று யோசிக்கத் தேவையில்லை. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
பொம்மைக் கடைக்குள் நுழைந்துவிட்ட குழந்தையின் குதூகலமான மனநிலையை ஒத்தது இது.
ஆண்டின் தொடக்கத்தில் மெட்ராஸ் பேப்பரில் ‘குட்டிச்சாத்தான் வசியக்கலை’ வந்துகொண்டிருந்தது. ப்ராம்ப்ட் எழுதுவது குறித்து எளிய தமிழில் விளக்கும் தொடர்.
உள்ளபடியே இது ஒரு கட்டிங்-எட்ஜ் தொழில்நுட்பம். அதை அனைவருமே படிப்பதற்கேற்ற தமிழில் எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி.
குட்டிச்சாத்தான் வசியக்கலை குறித்துத் தொடர்ந்து இமெயில்கள் வந்தன. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஏஐ மூலம் எப்படிச் செய்வது என்று விளக்கியிருந்தேன். அதை முயன்று பார்த்ததாக வாசக நண்பர்கள் தெரிவித்தபோது நிறைவாக இருந்தது.














Add Comment