நாய்கள், பேய்கள் மற்றும் மால்வேர்கள்
ஸ்மார்ட்ஃபோன்கள் தற்போது துவைதம். இரண்டே கட்சிகள்தாம். ஒன்று ஆண்ட்ராய்ட். மற்றொன்று ஆப்பிள். இவ்விரண்டையும் தாக்கும் மால்வேர் சாம்பிள்களைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம்.
ஆண்ட்ராய்ட் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆப்பிளில் குறைவு. ஆனால் வாய்ப்பே இல்லை என்று சொன்னால் அது பொய். வியாபாரத் தந்திரம்.
பேய் வருவதற்கான அறிகுறிகள் சில உள்ளன என்பார்கள். நீண்ட திரைச் சீலைகள் காற்றில் ஓங்காரமாகப் பறப்பது. தூரத்து நாய்கள் கொடூரமாகக் குறைப்பது. பேரிடி மின்னலுடன் மாமழை. அதைத் தொடர்ந்து பவர் கட். ஜன்னல்கள் படபடவென அடித்துக்கொள்வது. கொலுசுச் சத்தம். இப்படியாக ஒரு பட்டியல் உள்ளது.
அதுபோலவே மால்வேர் தாக்கத்துக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவை யாவை என இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொரு மால்வேரும் தனி. ஆயினும் எந்த நிறத்தினதாயினும் நாய் நாய்தானே? குரைப்பதும் கடிப்பதும் அவற்றின் பிறவிக் குணம்.











Add Comment