151. சின்ன மருமகள்
சீக்கிய மதத்தைச் சேர்ந்த கர்னல் ஆனந்தின் குடும்பம் பிரிடிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது மனைவி அம்தேஷ்வர் அமெரிக்காவில் கல்ஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
மேனகாவின் அப்பாவைவிட அம்மாதான் இந்தத் திருமணத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு லாபகரமான சமூகத்தின் தனது அந்தஸ்தினை அபரிமிதமாக உயர்த்தக் கூடிய ஒரு சம்பந்தம் என்றே பார்த்தார்.
சஞ்சய் காந்தி, மேனகாவின் வீட்டுக்கே நேரில் சென்று, “உங்கள் மகளை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று நேரிடையாகவே கேட்டுவிட்டார்.
அவர்களும், “எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை; எதற்கும் உங்கள் அம்மாவிடம் பேசி, அவரது சம்மதத்தைப் பெற்றுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள்.
Add Comment