157. ராஜ்நாராயணனுக்கு அதிர்ச்சி
வங்கிகளை அரசுடைமை ஆக்கியதன் மூலமாக சமூகப் புரட்சி செய்துவிட்டதாகப் பறைசாற்றிய இந்திரா காந்தி, அடுத்து பரபரப்பாக வேறு ஏதாவது செய்யத் துடித்தார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து, இரும்பு மனிதர் சர்தார் படேலின் முன்னெடுப்பில் தங்களது சுதேசி சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்து, அதன் பலனாக அந்த மன்னர்கள் தங்கள் கிரீடத்தை இழந்தனர்.
அதனை ஈடு செய்யும் வகையில் இந்திய அரசு, நம் அரசியலமைப்பின் 291 வது பிரிவின் கீழ் 1949 முதல் சுதேசி சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் மானியமும், இதர சலுகைகளும் வழங்கி வந்தது. இந்த மன்னர் மானியத் தொகைக்கு வரி ஏதும் கிடையாது.
மத மற்றும் இதர கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அந்த மன்னர் குடும்பத்தினரின் அனைத்து செலவுகளையும் ஈடுகட்டுவதுதான் இதன் நோக்கம்.
இதன் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கணிசமான நிதிச் சுமை ஏற்பட்டது.
இந்த மன்னர் மானியம் விஷயம் இந்திராவின் கண்களை உறுத்தியது. அதை நிறுத்த முடிவு செய்தார்.















Add Comment