Home » ஒரு குடும்பக் கதை – 179
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 179

179. துருப்புச் சீட்டு சரண் சிங்

நெருக்கடிநிலையின்போது அநியாய ஆட்டம் போட்ட சஞ்சய் காந்திக்கு என்ன கதி ஆனதோ அதுவேதான் தீரேந்திர பிரம்மச்சாரிக்கும் நிகழ்ந்தது. இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் ஜெயித்துப் பிரதமரான பிறகு மறுபடியும் செல்வாக்கோடு வலம் வந்த தீரேந்திர பிரம்மச்சாரி,1994 ஜூன் 9ஆம் தேதி டெல்லி சஃப்தர்ஜங் விமான நிலையத்திலிருந்து ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இருந்த தன்னுடைய ஆசிரமத்துக்குத் தன் சொந்த விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

மந்தலை என்ற ஊரில் இருந்த ஆசிரம வளாகத்துக்குச் செல்ல அவரது சிறிய சொகுசு விமானம் தரை இறங்கியபோது, எதிர்பாராத விதமாக பைன் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. விமான ஓட்டியும் தீரேந்திர பிரம்மச்சாரியும் அந்த விபத்தில் மரணமடைந்தனர். அதன் பிறகு அவரது ஆசிரமச் சொத்துக்கள் வெகுகாலம் சட்டப் போராட்டத்தில் சிக்கியிருந்தன.

நெருக்கடிநிலை காலத்தில் நடந்த வேண்டாதவர்களைப் பழி வாங்கும் படலங்களுக்குக் கணக்கே இல்லை. சொன்னபடி கேட்கவில்லையா? சாதகமாக நடந்து கொள்ளாமல் முட்டுக்கட்டை போடுகிறார்களா? தூக்கி எறி! பழி வாங்கு! ஜெயிலுக்கு அனுப்பு! இதுதான் அவர்களது பாணியாக இருந்தது!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!