Home » ஒரு குடும்பக் கதை – 200
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 200

200. மொரார்ஜி-சரண் சிங் மோதல்

கர்நாடகத்தில் ஓய்வுப் பயணமாகக் கோவில்கள் மற்றும் மடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திரா காந்திக்கு சஞ்சய் காந்தியின் கைது பற்றிய தகவல் அறிந்தவுடன் பெற்ற மனம் பதைபதைத்தது. உடனே டெல்லிக்கு விரைந்தார்.

விமான நிலையத்திலிருந்து நேராக திகார் சிறைக்குச் சென்று சஞ்சய் காந்தியைச் சந்தித்தார். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மகனை அணைத்துக் கொண்டு, ‘மன உறுதியை இழக்காதே. இது உன் அரசியல் வாழ்க்கையின் மறுபிறவியாக இருக்கும்’ என்று கூறினார்.

ஒரு மாதத்துக்கும் சற்று அதிகமாகச் சிறையில் இருந்தபின் சஞ்சய் காந்தி வெளியில் வந்தார்.

சஞ்சய் காந்தி சிறையிலிருக்க, இந்திரா காந்தியின் வீட்டில் மேனகா காந்தி மிகவும் தனிமையாக உணர்ந்தார். இந்திரா காந்தியைச் சந்திக்க வரும் சாமானிய மக்கள் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், ராஜீவும் சோனியாவும் தங்களுடைய தனிமை தகர்க்கப்பட்டுவிட்டதாக நினைத்தார்கள். சோனியா இப்போது வீட்டு வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!