கட்டுப்பாடு
ஆப்பிளுக்கு ஒரு புதிய போட்டி உருவானது. அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத போட்டியாளர். கூகுள்.
ஆப்பிள் தங்களுடைய ஐஃபோனுக்காக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியிருந்தது. ஐஓஸ். இதற்குப் போட்டியாக வந்தது ஆண்ட்ராய்ட்.
இன்று வரையிலும் தொடர்கிறது இப்போட்டி. தொடக்கத்தில் இது மிகவும் தீவிரமாக இருந்தது.
ஐஃபோன் குழுவினரை ஜாப்ஸ் அழைத்தார். கூகுள் இவ்வாறு செய்யுமென்று நான் நினைக்கவில்லை. நாம் அவர்களுடைய சர்ச் இன்ஜின் துறையில் தலையிடவில்லை. அவர்கள் மட்டும் ஏன் ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தில் தலையிடுகின்றனர் என்று கோபமாகப் பேசத் தொடங்கினார்.
ஜாப்ஸின் கோபத்துக்குச் சில காரணங்கள் இருந்தன. அதில் முதன்மையானது எரிக் ஸ்கிமிட் சார்ந்தது. இவர் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி. ஆப்பிளின் நிர்வாகக் குழுவிலும் (Apple board) இருந்தார்.















Add Comment