4. மா ஆனந்தோ
ஓஷோ தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், காமத்தை இலவசமாக விநியோகம் செய்யும் செக்ஸ் குரு என்று அவரை விமரிசனம் செய்தார்கள்.
இது குறித்து அவரிடமே கேட்டபோது, ‘காமத்தை இலவசமாகத்தான் பெற வேண்டும்; தர வேண்டும். அதைக் காசுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடல் உறவு இயற்கையான, அழகான நிகழ்வு. இருவரும் விரும்பினால் அதில் யாரும் தலையிடக் கூடாது. செக்ஸை ஓரிரவுக்கு விலை மகளிடமோ, வாழ்நாள் முழுவதும் மனைவியிடமோ வாங்க நினைப்பவர்கள், நான் சுதந்திரமான செக்ஸை உபதேசிக்கிறேன் என்று கூறுவது பரிதாபத்துக்குரியது’ என்று சொன்னார். (‘குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில்.)
இன்னும் ஒரு படி மேலே சென்று, தன்னுடைய காமம் சார்ந்த போதனைகளை Free Sex என்று குறிப்பிடுவதையே அவர் மறுப்பார். ‘நான் உங்களுக்கு அன்பைத்தான் போதிக்கிறேன். அதில்தான் நீங்கள் கடவுளைக் காண முடியும்’ என்கிறார் ஓஷோ…















Add Comment