பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவு கரைசலை எடுத்து பஜ்ஜிக்கு வாழைக்காயை மாவில் தோய்ப்பது போலத் தோய்த்து எடுக்க வேண்டும். பிறகு அதை சுருட்டி உள்ளங்கையில் வைத்து கட்டை விரலால் ஒரு அழுத்து அழுத்தினால் மாவு கரைசல் மோதிர விரல் வழியாக வழியும். அப்படி விழியும் போது அந்த மோதிர விரலை லாவகமாகச் சுழற்றி புள்ளி வைத்து நெளி கோலம் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? இத்தனை கலை உணர்வும் ரசனையும் உள்ள என்னைக் கொண்டு வந்து பொங்கல் கொண்டாட்டம் இல்லாத அபுதாபியில் குடித்தனம் நடத்தச் சொல்வது நியாயமா?
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
கணவரின் வேஷ்டி சரி ஆனாலும் புது வேஷ்டி கொடுமை!
விஸ்வநாதன்