Home » ‘நீதிதான் அமைதியின் அடிப்படை’ – நவி பிள்ளை
விருது

‘நீதிதான் அமைதியின் அடிப்படை’ – நவி பிள்ளை

நவி பிள்ளை

2026ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் போட்டியால் உலகின் பல பகுதிகளில் போர்கள் தொடர்கின்றன. எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது; அப்பாவி மக்களின் வாழ்க்கை சிதைகிறது. இந்தச் சூழலில், அமைதி என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது.

ஆயுதங்கள் இருந்தும் பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமே அமைதியல்ல. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க முடிவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்கள்கூடச் சட்டத்துக்குக் கட்டுப்படுவதும்தான் நிலையான அமைதிக்கான அடிப்படைகள். இந்தக் கருத்தை உலக அரங்கில் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார் நவநீதம் ‘நவி’ பிள்ளை.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நீதியாளர் நவி பிள்ளைக்கு, சர்வதேசச் சட்டத்தையும் அமைதியையும் மேம்படுத்திய பணிகளுக்காக இந்த நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. நீதிக்காகப் போராடுவது என்பது நீதிமன்ற அறைக்குள் மட்டுமே நிகழும் செயல் அல்ல என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!