அந்த காரின் விலை ஒன்றரை கோடி ரூபாய். அதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
அப்போது அவரைத் தேடி சில நண்பர்கள் வந்தனர். பசியாலும் வறுமையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்துப் பேச்சு வந்தது. சிறிது நேரம் யோசித்தார். எவ்வளவு குடும்பங்கள் என்று கேட்டார். நூற்று இருபத்தைந்து குடும்பங்கள்.
காருக்கு வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் பணத்தைப் பிரித்து, நண்பரிடம் காசோலைகளாகக் கொடுத்தார். இதைப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களிடம் சேர்த்துவிடச் சொன்னார். அமர்ந்து செல்ல ஒரு வாகனம், அதற்குச் செலவழிப்பதை விட இது எவ்வளவோ மேல் என்று சொல்லிவிட்டார்.
ஒரு தனியார் நிறுவனம் இவருக்கு விருது கொடுத்துக் கௌரவித்தது. விருதுடன் பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்டார். பத்து லட்சம் ரூபாயை அப்படியே மகாராஷ்டிரா மாநில வறட்சி நிவாரண நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
அவர்தான் நானா பாடேகர்.















Add Comment