கர்மக் கனிகள்
புதிய வகுப்புக்குச் செல்லும் மாணவனைப் போல யாஷா நின்றிருந்தாள். பைராகி அவளுடைய கோர முகத்தில் ஒரு புன்னகையுடன் வரவேற்றாள்.
குன்று போலச் சாம்பல் குவித்து வைக்கப்பட்டிருந்த யாகக் குண்டத்தில் வாள்களும் திரிசூலமும் இடுக்கிகளும் குத்தி வைக்கப்பட்டிருந்தன. யாக சாலையின் முன் யாஷா உட்கார வைக்கப்பட்டாள். யாஷாவை நோக்கிப் பல மந்திரங்களைக் கூறத் தொடங்கினாள் பைராகி. நரபலி பயம் சிறிது இருந்தாலும், யாஷாவுக்கு பைராகியின் மந்திரங்களும் தொடுதல்களும் ஒருவித நேர்மறைத் தன்மையையே உணர்த்தின.
அகல் விளக்கு ஒளி மட்டுமே இருந்தது. அறை முழுவதும் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்தது. மண் சுவர்களின் ஈர வாசனையையும் விறகு எரிந்த வாசனையையும் மூக்கில் நெடியாக உணர முடிந்தது. அருகே இருந்த கறுப்புக் கம்பளிப் போர்வையை எடுத்து யாஷாவைப் போர்த்தி, அதனுள் பைராகியும் புகுந்துகொண்டாள்.















Add Comment