சமூக ஊடகங்கள்
இன்றைக்குப் பதின்ம வயதினர் பெரும்பாலானோர் கையில் செல்பேசியோடு இருக்கிறார்கள். அவர்கள் தனியாக வெளியில் போக வர, வீட்டில் தனியாக இருக்கும்போது உணவு வாங்க, தங்களது இருப்பிடத்தைச் சொல்ல என செல்பேசி இன்றியமையாததாகிவிட்டது. இதோடு நில்லாமல், அவர்களுடைய நண்பர்கள் வட்டத்துடன் செல்பேசி மூலமாகவே, குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமே தொடர்பில் இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் சமூக ஊடகங்களால் பதின்ம வயதினருக்கு என்னென்ன நல்லது கெட்டது எனப் பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு நகரங்களைத் தாண்டி வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களிடம் தீபக் குமார், சுவேதா புட்டாடா ஆகியோர் நடத்திய ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. சுமார் 89 சதவீதத்தினரின் வீட்டில் ஒரு திறன்பேசியாவது இருக்கிறதாம். 82 சதவீதத்தினருக்கு அதைக் கையாளத் தெரியுமாம். 76 சதவீதத்தினர் கடந்த ஒரு வாரத்தில் ஒருமுறையாவது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.















Add Comment