Home » பீதியைக் கிளப்பும் பிளேக்
உலகம்

பீதியைக் கிளப்பும் பிளேக்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள தார்யா ஷிபிலோவ்வின் மரணம், உலகம் முழுக்க பிளேக் நோயின் அச்சத்தைப் பரப்பியிருக்கிறது. இருபத்தெட்டு வயதாகும் தார்யா, அங்குள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவர். இம்மாதம் இரண்டாம் தேதி திடீரெனக் கடும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.

ரஷ்யாவின் கிழக்கிலுள்ள சைபீரிய மாகாணத்தில் அமைந்துள்ளது அந்நிறுவனம். அங்கிருக்கும் காட்டு விலங்குகளில் இயற்கையிலேயே பிளேக் நோய்க்கிருமிகள் காணப்படுகின்றன. ஆனால் மனிதர்களிடையே இந்தத் தொற்றுப் பரவல் இருப்பதில்லை.

தார்யா பணியிலிருக்கும்போது தவறுதலாக உடைத்த ஒரு டெஸ்ட் டியூப் வழியாக அவருக்கு பிளேக் தொற்று ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. அந்த வதந்தியே உலகம் முழுவதும் இந்தச் சம்பவத்தை உற்று நோக்கக் காரணமானது. இறந்துபோன தார்யாவின் தாயார் பின்னர் இப்படிப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனாலும் இறப்புக்கான துல்லியமான காரணம் தெரியாதது சந்தேகங்கள் தொடர வழிவகுக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!