ஒருமுறை ஏழு நாள்கள் அரிசி சாதத்தைக் கண்ணால் கூடப் பார்க்கக் கூடாத ஜிஎம் டயட்டை ஆரம்பித்தேன். அன்றிரவு பிரியாணியுடன் அதை முடித்து வைத்தேன். காலை ஒருநேர உபவாசம் இருந்தாலும் இதுவே என் நிலைமை. எனக்கு சாத்வீகத்தை அறிமுகப்படுத்தியவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தோழி. நாள் முழுக்க இருந்த விரதத்தை அவர் போஹா உண்டு முடித்துக்கொண்டார். வெள்ளை நிற உடையில், நெற்றியில் விபூதியுடன், கையில் போஹா கிண்ணத்துடன் அன்று அவர் மஹானைப் போலக் காட்சியளித்தார்.
போஹா என்பது நம்மூர் அவல். வெள்ளை, சிவப்பு அவல் வகைகளை வட இந்தியாவில் போஹா என்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகே அதன் அருமையைப் புரிந்துகொண்டேன். சமைக்கும் போதிருந்து தொடங்குகிறது அதன் எளிமை.
வெள்ளை நிறத்தில் நீண்ட கார்ன் ஃப்ளேக்ஸ் போலிருக்கும் போஹா. அதில் உப்பு முதற்கொண்டு எந்தச் சுவையும் இருக்காது. அதை நீரில் கழுவி வடிவதற்கு வைத்தால், அதன் நீர் வடிவதற்குள் போஹாவைச் சமைத்துவிடலாம். இதனாலேயே வீட்டிலிருந்த அனைவருக்கும் பிடித்தமான உணவாக போஹா அமையுமாறு பார்த்துக்கொண்டேன்.















Add Comment