Home » பனிப் புயல் – 17
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 17

ஒற்றைத் தீப்பொறி 

12-ஆகஸ்ட்-2000

ரஷ்யாவின் புதிய அதிபரை மட்டுமல்ல, ராணுவத்தின் வலிமையையும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தது. சோவியத்தின் பிரிவுக்குப் பிறகான பத்தாண்டுகளில் உள்நாட்டுக் குழப்பங்களால் ராணுவம் வலுவிழந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. மேற்குலகோடு நட்புறவாடினாலும் போரைச் சந்திக்க எப்போதும் தயாராக இருப்பதே சோவியத்தின் பாரம்பரியம்.

ராணுவ ஒத்திகை தொடங்கியது. அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், பனிப்போர் காலத்திலிருந்தே சோவியத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. அவற்றைக் கையாள ஐந்நூறு அடி நீளமுள்ள உலகிலேயே மிகப்பெரிய அந்தே-கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியிருந்தது ரஷ்யா. சப்போட்டா மரத்தின் நீளமுள்ள இருபத்து நான்கு ஏவுகணைகளைத் தாங்கியபடியே கடலுக்கடியில் முப்பத்து மூன்று நாட்ஸ் வேகத்தில் நகரக்கூடியது இந்த குர்ஸ்க் K -141 நீர்மூழ்கி. அணுஆயுதங்களையும் ஏவும் திறன் கொண்ட இவை, ரஷ்யாவின் வடக்குக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

ராணுவ ஒத்திகைக்கு எப்போதும் போலி குண்டுகளைப் பயன்படுத்துவதே வழக்கம். அட்மிரல் வீச்சஸ்லாவ் போபோவ் தலைமையில் இரண்டு சோதனை குண்டுகளை ஏவ குர்ஸ்க் நீர்மூழ்கிக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகையை அமெரிக்காவும் நார்வேயும் கூர்ந்து கவனித்து வந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!