Home » அரை சதவீதமும் முக்கியம்!
தமிழ்நாடு

அரை சதவீதமும் முக்கியம்!

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் ஒரு கட்சி ​தொடங்கப்பட்டால், அதே காரணத்துக்காக உருவான பழைய கட்சி ஒன்று அந்தக் கொள்கையைத் தியாகம் செய்துவிடும். மதிமுக ​தொடங்கி மநீம வரை இதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். தேமுதிக அந்தப் பட்டியலில் புதுவரவு. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சங்கமம் ஆகியிருக்கிறது தேமுதிக. பாலில் பழம் விழ இருபதாண்டுகள் எடுத்துக்​கொண்டது.

விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கியபோது திமுக எதிர்ப்புதான் முதன்மைக் கோஷம். 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. அன்றைய காலக்கட்டத்தில் அக்கட்சியில் விஜயகாந்த் மட்டுமே தமிழ்நாடு முழுக்க அறியப்பட்ட முகம். அடுத்த நிலையில் பரவலாக அறியப்பட்டவராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். மக்கள் மத்தியிலும், சினிமா வட்டாரத்திலும் நல்லவர் என்ற அடையாளத்தைப் பெற்றிருந்தார் விஜயகாந்த். நடிகர் சங்கச் செயல்பாடுகள் வழியாகத் திறமையான நிர்வாகி என்ற நற்பெயரும் இருந்தது. அந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும்தான் வெற்றி பெற்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!