201. சிக்மகளூர் வெற்றி
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறிய நகரம் சிக்மகளூர். அங்கே காபித் தோட்டங்கள் மிகுதி. சிக்மகளூர் காபிக்குத் தனிச்சுவையும் மணமும் உண்டு.
சிக்மகளூர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்கு ஏற்ற தொகுதி என முடிவெடுத்ததற்குச் சில முக்கியமான காரணங்கள் இருந்தன. தொகுதியின் 50% வாக்காளர்கள் பெண்கள். வாக்காளர்களில் 45% தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மைனாரிட்டி இன மக்கள். தொகுதியின் மக்கள்தொகையில் சுமார் 40% வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தார்கள்.
இடைத் தேர்தல் வெற்றி என்பது இந்திரா காந்தியின் அரசியல் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். அவரது மறு எழுச்சியைப் பல மடங்கு விரைவுபடுத்தும் என்பது இந்திரா காந்திக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
அதேநேரம் தேர்தலில் தோல்வி அடைந்தால், இன்னமும் மக்களுக்கு நெருக்கடி நிலை காரணமாக இந்திரா காந்தி மீதான கோபம் இன்னும் தணியவில்லை என்று அர்த்தம்.















Add Comment