Home » சொகுசாக மிதக்கலாம் வாங்க!
சுற்றுலா

சொகுசாக மிதக்கலாம் வாங்க!

நல்ல வெயில். அவ்வப்போது கடல் காற்று தேகத்தின் மீது சற்றே படர்ந்து செல்லும். நீச்சல் குளத்தைப் பார்த்தபடி கால்களை நீட்டிச் சாய்ந்தவாறு படுக்கை. கண்களில் சன் க்ளாஸ். ஒரு கையில் புத்தகம், சிலர் கையில் கிண்டில். மறு கையில் ஜூஸ். ஜூஸ் என்றால் வேறென்ன? சரக்குதான். பெரும்பாலானோர் கையில் காக்டெய்ல், பீர், ஒயின் என்று பல வண்ணங்களில் பானம். சரக்கா… என்று இழுப்பவர்களுக்கு மாக்டெய்ல். இரண்டும் வேண்டாம் என்பவர்களுக்குக் கோன் ஐஸ்கிரீம்.

வெள்ளைக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள். சிலை போல இருப்பதினால் நீச்சல் ஆடையில் இருக்கிறார்களா? இல்லை, நீச்சலுக்காகவே சிலை போல இருக்கிறார்களா என்று வியப்பூட்டும் உடல் வடிவம்.  ஆண்கள், பெண்கள் இருவரும் நீச்சல் உடையில் இளைப்பாறுகிறார்கள். சுற்றி மூன்று பக்கமும் நீச்சல் குளமும், இளைப்பாறும் இடமும். மிச்சமிருக்கும் ஒருபக்கம் சரக்கு கலக்கும் பார்.

இளைப்பாறி போர் அடித்துவிட்டது என்றால், மெல்ல நடந்து தள்ளி வந்து நிற்கலாம். அப்போதுதான் சுற்றி உள்ள பசிபிக் பெருங்கடல் கண்ணுக்குத் தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் மட்டுமே. அப்படியே கொஞ்சம் குனிந்து பார்த்தால், பதினைந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி கப்பலில் நிற்பதும் புரியும். சற்று தள்ளாட்டமாக இருக்கலாம். காரணம், பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பிரமாண்டமான கப்பலின் ஆட்டம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!