‘இரானில் போர் தொடுக்கச் செல்லும் அளவுக்கு உடனடி ஆபத்து எதுவுமில்லை, இந்தப் போரே அநாவசியம்.’ இதைச் சொன்னது யாரோ இல்லை; அமெரிக்காவின் தீவிரவாதத்தைத் தடுக்கும் துறையின் உயர்மட்டத் தலைவர் ஜோ கென்ட்.
இதைத் தன் ராஜினாமாக் கடிதத்தில் சொல்லியிருக்கிறார் அவர். அமெரிக்க அரசியலில் சிலருடைய வாழ்க்கைகள் மட்டுமே ஒவ்வொரு திருப்பத்திலும் நம்மை வியக்கவைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. ஜோ கென்ட் அவர்களில் ஒருவர். ஒரு ராணுவ வீரராக, கணவராக, அரசியல்வாதியாக, கடைசியில் ஒரு மனசாட்சியின் குரலாக இவருடைய பயணம் அமெரிக்காவின் ஒட்டுமொத்தப் போர்க்கால மனநிலையின் வெளிப்பாடு.
1980 ஏப்ரல் 11 அன்று ஆரேகான் மாநிலத்தின் ஸ்வீட் ஹோம் என்ற இடத்தில் சாதாராண குடும்பத்தில் பிறந்தார் ஜோசப் கிளே கென்ட். இவரது பெற்றோர் ரோமன் கத்தோலிக்கர்கள். போர்ட்லேண்ட் நகரில் வளர்ந்த இவர் சிறுவயதிலேயே ராணுவத்தின்மீது தீவிர ஈர்ப்பு கொண்டிருந்தார். சிறு வயதில், கிடைக்கும் லெகோ விளையாட்டு கற்களை (blocks)கொண்டு ஆயுதங்கள் செய்வது வழக்கம்.















Add Comment