புஷ்பக விமானம்
திருமங்கலத்தில் மெட்ரோ ரயிலுக்குள் ஏறும்போது மணி ஒன்பது பதினாறு. சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இடையில் ஏழு நிறுத்தங்கள் இருந்தன. ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் ஐந்து நிமிடம் எடுக்கலாம். பத்து மணிக்குள் அலுவலகத்துக்குப் போய்விட முடியுமா? முதல் நாளே லேட்டாகிவிடுமோ?
கவலைப்பட்டு முடிப்பதற்கு முன்னரே ரயில் நின்றது. அண்ணா நகர் கோபுரம் பக்கத்திலேயே இருக்கிறது, அதனால் விரைவாக வந்திருக்கலாம். ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களில் அண்ணா நகர் கிழக்கும் வந்துவிட்டது. ஆக ஒரு நிறுத்தத்துக்கு இரண்டே நிமிடங்கள்தான். கதவும் பத்து நொடிகளுக்குள் மூடிவிடுகின்றன.
பத்து மணிக்குள் தாராளமாகச் சென்று விடலாம். அந்த நிம்மதி வந்த பிறகுதான் ஏசி குளிர் நன்றாக உறைத்தது. கிராப் டாப்பும், ஸ்கர்ட்டும் அணிந்த யுவதிகள் முதல் புடைவைத் தலைப்பை இழுத்துச் சொருகிப் பூ வைத்த பெண்கள் வரை எல்லா வயதிலும் மகளிர், பெட்டியை நிறைத்திருந்தனர்.















Very well written, nice articulation!