24 மீ காய் கரு 2
கோவணம் கட்டிய விவசாயியை மதுரையில் பார்த்த காந்தி, வாழ்நாளுக்கும் எளிய உடையை அணியத் தொடங்கியதைப்போல, இளைஞர்களுடன் பயணம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து இளைஞர்கள் கிராமம் என்கிற எண்ணம் பாபா ஆம்தேவுக்குள் பொறியாக விழுந்திருக்கவேண்டும்.
ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் மடத்தை நிறுவியதைப்போல, நாத்திகரான பாபா இளைஞர்களை வைத்து திசைக்கொன்றாக ‘மாதிரி கிராமத்தை‘ உருவாக்கவேண்டும் என்கிற தம் கனவை நெருங்கிய சகாக்களுடனும் நாயர் போன்ற நம்பிக்கையளிக்கக்கூடிய இளைஞர்களுடனும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் என்று காதில் விழவே, ‘என்ன இது‘ என்று சுதீரிடம் கேட்டான்.
‘அவருக்கு இப்படி எதாவது அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கும். சிறியதாகத் தொடங்குகிற அது, காலப்போக்கில் அபரிமிதாய் விரிந்து எல்லோரையும் வியந்து பார்க்கவைக்கும் – ஆனந்த்வன் போல என்றான்.















Add Comment