28 அஸ்திவாரம்
ருத்ரைய்யா ஆபீஸில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த இரவொன்றில், சுடச்சுட வந்துகொண்டிருந்த இட்லியைச் சாப்பிட்டபடி இருக்கையில் ‘உன்னோட பாஸ்ட்ட எழுதினாலே போதும் ஆளாயிடுவேன்னு நீ ஒரு தடவை சொன்னே. நினைவிருக்கா‘ என்று இருந்தாற்போலிருந்து கேட்டான் வசந்தகுமார்.
சொன்னது போலவும் இருந்தது சொல்லாததைப்போலவும் இருந்தது. சொல்லியிருக்கக்கூடும் என்றுதான் பட்டது. இருந்தாலும் வில்லங்கமாக எதையோ சொல்லப்போகிறான் எனத் தோன்றவே ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்துவிட்டான்.
‘சேஷையா ரவிங்கிற எழுத்தாளர் தன்னோட அனுபவங்கள் ஆழமானது. யாருக்குமே இல்லாதது, ரொம்ப கனமானதுனு நெனைக்கிறார்ப்பா. சின்ன வயசுல இருந்த வறுமை, அப்பா அம்மா குடும்பம் இதைத்தாண்டி உனக்கு அனுபவம்னு சொல்லிக்க என்னப்பா பெருசா இருந்துடப்போவுது. ரவிக்கு அப்படியில்லே‘ என்றான் பாதி சிரிப்பும் பாதி சீரியஸுமாக.
இவனுக்கு சுருக்கென்றது.















Add Comment