38 சேவை
தான் நினைப்பது ஆசைப்படுவது எதுவுமே நடக்காது என்பது இவனுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்தது. நினைக்காததாவது நடந்துவிடுமா என்றால் அதுவும் நடக்காது என்பது வேறு விஷயம்.
பார்க்கப்போனால், இது ஒன்றும் பிரத்தியேகமானதன்று, மனிதர்களில் பெரும்பாலோருக்குத் தோன்றுவதுதான். வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் அனைவருமே இப்படிச் சொல்லிப் புலம்பியிருக்கவும் சாத்தியமுள்ள சாதாரண விஷயம்தான். ஆனால் ஒவ்வொருவரும் தனக்கு மட்டுமே இப்படி நடப்பதாக நினைத்து மறுகி, உள்ளூரத் தேம்பி மற்றவர்களிடம் சொல்லி, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை உன் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும் என அடுத்தவர்கள் சொல்லமாட்டார்களா என மாடு மாதிரி கழுத்தைத் தூக்கிக் காட்டிக்கொள்வதைப்போல இவனுக்கும் இப்படி எண்ணிக்கொள்வது ஆறுதலையும் இவ்வளவு தடைகளையும் மீறித் தனித்து இந்த உலகை எதிர்கொண்டு எதிலும் நம் தனித்துவத்தை நிலைநாட்டி உலகுக்கு நிரூபிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருவதாக இருந்தது.














Add Comment