40 அவஸ்தை
அம்மா அப்பா என்று இரண்டு பக்கமும் கன்னடம் மராத்தி என மொழி வேறாக இருந்தாலும் இரண்டு குடும்பங்களிலும் பெரியவர்கள் சின்னவர்கள் என்கிற வித்தியாசமின்றி சிறு வயதிலிருந்தே எல்லோரும் எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். தமிழ் பிராமணர்களுக்கே இது முகம் சுளிக்கவைக்கிற விஷயமாக இருக்கையில் அப்பிராமணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அம்மாவை வா போ என்று ஒருமையில் அழைப்பதே அவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சியாக இருந்ததில் வியப்பேயில்லை. வியப்போடு நின்றால் பரவாயில்லை. ‘பாப்பாருங்க சொந்த அம்மாவையே பேர் சொல்லி வா போனு கூப்புடுவாங்க’ என்று சிறுவயதில் இவன் எதிரிலேயே சொல்வார்கள்.
அது அது அவரவர் வாழ்கை, அவரவர் பழக்க வழக்கம் என்று சகஜமாக எடுத்துக்கொள்கிற பெருந்தன்மை இருந்தால் தமிழன் ஏன் கருத்துலகில் இன்னும் கற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கப்போகிறான் என்று எண்ணிச் சிரித்துக்கொண்டபடி பஸ்ஸிலிருந்து இறங்கினான்.














Add Comment