44 விழுதல்
சிறுவயதிலிருந்தே கொட்டிக்கொள்ள மட்டுமே வீட்டிற்கு வருவதாகவும் மற்ற நேரமெல்லாம் வெளியிலேயே திரிந்துகொண்டிருக்கிறான் என்றும் அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவன், சம்பாதிக்க ஆரம்பித்ததும் கொட்டிக்கொள்வதும் வெளியில் என்று ஆகிவிட்டிருந்ததால் தன்னை முழுக்க முழுக்க வெளியுலக மனிதன் என்று நண்பர்கள் சொல்வது மட்டுமின்றி தனக்குத்தானேயும் எண்ணிக்கொண்டு, தான் தன் ரசனை தன் எழுத்து அதில் சாதிப்பது எப்படி என்று தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கிறவன், அதன் ஒரு பகுதியாக மேற்கொண்ட இந்த சைக்கிள் பயணம், அவனைத் தலைகீழாக மாற்றிப் போட்டுக்கொண்டு இருப்பதாக எண்ணத் தலைப்பட்டிருந்தான்.
அப்படி அவன் நினைக்க அடிப்படைக் காரணம், பிறவி இயல்பான பேச்சு குறைந்துவிட்டிருந்ததுதான் என்றும் பேச்சு குறைந்ததற்கு முக்கியமான காரணம் கும்பலிலிருந்து விலகி சுதீருடன் இருக்கத் தொடங்கியதுதான் எனவும் அவனுக்குத் தோன்றிற்று. ரேலி தன்னை மட்டுமின்றி இன்னும் சிலரையும் குறிப்பாக சுஜாதாவையும் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தன்னிடம் சாதகமான மாற்றமும் அவளிடம் பாதகமான மாற்றமும் உண்டாகிக்கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. இல்லையென்றால் ஒருத்தி எப்படி யாரென்றே தெரியாத பசங்களுக்கு நடுவில் போய் படுப்பாள்.














Add Comment