46 அற்ப ஆயுள்
விளக்கணைக்கப்பட்டுக் கூடமே இருட்டாக இருந்தது. வெளி விளக்கின் வெளிச்சம் உள்ளே மங்கலான விரவியிருந்தது. இருந்த இடத்தின் இருட்டுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. இடப்பக்கம் முழுக்கவே வலித்துக்கொண்டிருந்தது. குறிப்பாக இடக்கை மணிக்கட்டில் வலி கொன்றுகொண்டு இருந்தது. இருந்தாலும் போய்த்தானே ஆகவேண்டும் என டாக்டர் ஜோஷியைத் தேடிப்போனான். நீண்ட கூடத்தின் நடுவே பிடித்துக்கொள்ள எதுவுமின்றி நடப்பது ரொம்பக் கஷ்டமாக இருந்தது.
பெரிய உருவம் என்பதாலும் ஏற்கெனவே அவர் உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருந்தது படம் போலப் பதிந்துவிட்டிருந்ததாலும் படுத்திருந்த டாக்டர் ஜோஷியைக் கண்டுபிடிப்பது பெரிய கஷ்டமாக இருக்கவில்லை. எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் மணிக்கட்டு வலிதான் நொடிக்கு நொடி விஷம்போல ஏறிக்கொண்டிருந்தது.














Add Comment