50 கனவுக் கதை
பலருக்கும் கனவாக இருக்கிற பாம்பே இன்னும் இரண்டே நாட்களில் வரவிருக்கிறது என்பதைவிடவும் லோனாவாலாவை நோக்கி லாரியில் போய்க்கொண்டிருக்கும்போதும் பார்த்துவிட்டு விட்டு வந்த பூனா திரைப்படக் கல்லூரிதான் மனம் முழுக்க வியாபித்திருந்தது.
பூனா ஃபில்ம் இன்ஸ்டிடியூட் இருக்கிற ஊரில் இருக்கிறோம் என்பதைப் பற்றிய பெருமிதம் பூனா பெண்கள் எவரிடத்திலும் காணப்படாதது வியப்பாக இருந்தது. இத்தனைக்கும் எல்லோரும் சினிமா பார்ப்பவர்கள். இருந்தும் எப்படி?
அவர்கள் பார்க்கிற சினிமா வேறு இன்ஸ்டிடியூட்டிலிருந்து வருபவர்கள் எடுக்கிற, நடிக்கிற சினிமா வேறு. எல்லாரையும் போல இல்லாமல் பொதுவாழ்வில் பொதுநலச் சேவையில் ஈடுபாடுகொண்ட இந்தப் பெண்களுக்குக் கூடவா வித்தியாசமான ரசனை இல்லை. ஹளேதி குங்கும் படத்திற்குத் திரண்ட கும்பலைப் பார்த்தபோதே, ‘கலை இலக்கியம் என்பது உலகமெங்கும் சிறுபான்மைக்குத்தான். என்ன தமிழில் சதவிகிதத்தில் கூட வராதது மலையாளத்தில் சதவிகிதத்தில் வரும் ஃப்ரான்சில் 20, 30% இருக்கக்கூடும்’ என்று க்ரியா ராமகிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது.















Add Comment