Home » சக்கரம் – 54
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 54

54 ஹை அண்ட் லோ

‘நாளை தாராவி செல்கிறோம்’ என்று நாயர் சொன்னதற்கு ஒன்றுமே சொல்லாமல் சுதீர் அமைதி காத்ததைப் போல நாமும் வராமல் கழன்றுகொண்டிருந்திருக்கலாமோ எனத் தோன்றிற்று.

இந்த சைக்கிள் பயணம் ஊர் சுற்றிப் பார்க்கும் டூர் இல்லை. மனிதர்களைத் தெரிந்துகொள்வதற்கானது. தேசத்தைப் புரிந்துகொள்வதற்கானது என்று லட்சியவாதியான பாபா ஆம்தே அலங்காரமாகச் சொன்னதைக் கேட்டு, இங்கே வந்திருக்கக்கூடாதோ என்று கிளம்பும்போது தோன்றியது.

இயற்கை அழகையும் மனிதன் உருவாக்கிய பிரம்மாண்டங்களையும் கண்டு அதிசயித்து ரசிப்பதைப்போலவே பாம்பே என்கிற மாநகரம் உருவாக்கிவைத்திருக்கும் மாபெரும் கழிவான தாராவியையும் பார்ப்பதுதான் சரி என்பதை ஏட்டளவில் ஏற்றுக்கொண்டாலும் நேரில் பார்க்க சிரமமாகத்தான் இருந்தது. மனிதர்கள் வாழுமிடத்தைக் கண்றாவி என்பது தவறு என்று தெரிந்தாலும் ஆடு மாடுகளைவிடக் கேவலமாக வாழும் கொடுமையை வேறு எப்படித்தான் சொல்வது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!