Home » உயிரே, உறவே, ஊழலே!
உலகம்

உயிரே, உறவே, ஊழலே!

ஒரு சதவீதமேனும் ஊழலற்ற நாடு இந்தப் பூமியில் இல்லை. ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இதைச் சொல்லியிருக்கிறது. உலகில் ஊழல் மிகவும் குறைவான நாடாக டென்மார்க்கையும், ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தென் சூடானையும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பொதுத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகக் காணப்படுகிறது என்பதை வைத்து இந்த அமைப்பு நாடுகளை வரிசைப்படுத்துகிறது. உலக வங்கி உள்ளிட்ட பதின்மூன்று அமைப்புகளிடமிருந்து பெறப்படும் தரவுகள்தான் இவர்களுக்கு ஆதாரம். 182 நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றன.

பூச்சியம் மதிப்பெண் என்றால் ஊழலில் ஊறித் திளைத்த நாடு என்று அர்த்தம். 100 மதிப்பெண் என்றால் அறவே கறை படியாத கரங்களைக் கொண்ட நாடு. சில நாட்களுக்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியை வெளியிட்டிருக்கிறது ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!