இருபத்தேழு வருடப் பெருமைக்குரிய பணிக்குப் பிறகு, நாசாவிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஐகானாக மாறியிருக்கும் சுனிதா, ஒரு பெண்ணாக இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது அசாதாரணமானது. அதுவும் விண்வெளித் துறையில் அதைச் சாதித்திருப்பது, இன்னும் கடினமான உழைப்பைக் கோரக்கூடியது. உழைப்பு மட்டுமின்றி, சுனிதாவின் ஆழ்ந்த கல்வி, உறுதியான மனநிலை போன்றவையுமே அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
1965இல் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் பிறந்தார் சுனிதா. குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை தீபக் பாண்ட்யா, ஒரு நரம்பியல் நிபுணர். தாய் போனி பாண்ட்யா, ஸ்லோவேனிய அமெரிக்கர்.
தன் பெற்றோரின் இரு நாடுகளையும் நேசித்தார் சுனிதா. அதைப் பிரதிபலிக்கும் விதமாக, ஸ்லோவினியக் கொடி, சமோசா, ஸ்லோவினியாவில் பிரபலமான கார்னியோலான் சாசேஜ் போன்றவற்றை விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். கலாசார ரீதியிலும் இரு நாடுகளின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்.















Add Comment