செப்டம்பர் 19,2025. சிங்கப்பூர். புனித ஜான் தீவை நோக்கி அப்படகு சென்று கொண்டிருந்தது. சிறிய விருந்தொன்றை சுபீனின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சுபீனின் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அடுத்த நாள் சுபீனின் இசைக் கச்சேரி. அதற்கு முன் சற்று இளைப்பாறலாம் என்று புனித ஜான் தீவைத்...
Tag - வெள்ளித்திரை
2023க்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் அவரது நாற்பத்தைந்து ஆண்டுகாலச் சேவையைப் பாராட்டி அவருக்குக் கடந்த வாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த விருதை வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது...
நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவாலும், அஷ்டாவதானி என்று திரையுலகினராலும் அழைக்கப்பட்ட நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் நூற்றாண்டு விழா இந்த மாதம் கொண்டாடப்படுகிறது. 1925 செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம், பிரகாசம் மாவட்டத்தில் தோடவரம் என்ற ஊரில் பிறந்தவர் பானுமதி. தந்தை...
முத்துப்பேட்டை சோமு பாஸ்கர், சுருக்கமாக எம் எஸ் பாஸ்கர். பார்க்கிங் என்ற தமிழ்ப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்...
இந்தி சினிமாவின் போக்கை குரு தத்துக்கு முன், பின் எனப் பிரிக்கலாம். இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் இன்று வரை ஒவ்வொன்றும் காவியமாகக் கருதப்படுகிறது.
மெய்நிகர் தயாரிப்பு வசதி (Virutal Production Facility) ஒன்றை இங்கு நிறுவியிருக்கிறார்கள். இந்த அரங்கின் பரப்பளவு மட்டும் பத்தாயிரம் சதுர அடி.
மிஷன் இம்பாசிபிள் எட்டாவது படம் வெளியாகியுள்ளது. இவ்வரிசைத் திரைப்படங்களின் எட்டாவது திரைப்படம் இது. கடைசிப்படமாகவும் இருக்கலாம். ஒரு கணிப்பொறி நிபுணர். ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். ஒரு சாகச இளைஞன் என ஆரம்பித்ததுதான் மிஷன் இம்பாசிபிள். ஹாலிவுட் அல்லது அமெரிக்கப் படவுலகிற்குத் தங்களுக்கென்று ஜேம்ஸ்...
பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...
தமிழ் சினிமாவின் ஆதிகால சூப்பர் ஸ்டாருக்கு இது நூற்றாண்டு நேரம். ‘ஆதித்தன் கனவு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்தக் கதாநாயகரின் மேல் மக்கள் கல்லெறியும் காட்சி ஒன்று இருந்தது. அந்தப் படத்தில் துணை நடிகராக நடிக்க வந்த ஒரு நடிகர் தனது ஆதர்ச நடிகர் மற்றும் பாடகர்மீது கல்லெறிய முடியாது என...
“உள்ளே விழுந்தது யாரோ கிடையாது சார். என் நண்பன். ஒன்பது பேராய் வந்து எட்டு பேராய்த் திரும்பப் போகிற எண்ணம் எங்கள் யாருக்கும் கிடையாது. அவன் உயிரோடு இருக்க மாட்டான் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. ஒரு சின்ன சத்தம், ஒரு அழுகை எங்கள் காதில் விழுந்ததுதான் தாமதம்…. இதைக் கடைசிவரை பார்த்து விடுவது...














