கே.ஏ. செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கழகத்தின் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எந்த விளக்கமும் கேட்காமல் தான் நீக்கப்பட்டிருப்பது ஜனநாயகபூர்வமானதல்ல என்பதைக் கொஞ்சம் குழப்பமாக...
Tag - தமிழ்நாடு
சென்னையின் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மத்திய ரயில்வே துறையின் ஒப்புதலையடுத்து, இந்த இணைப்பு தொடர்பான நிபந்தனைகளும் விதிமுறைகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பறக்கும் ரயில் சேவையைக் கட்டுப்படுத்தவுள்ளது...
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்திற்கு முன்பாக, கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட அறுநூறு பேரை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் சென்னை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட...
‘ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்’ என்ற செய்திக்கு ஒரு காலத்தில் மதிப்பிருந்தது. இப்போதும் அத்தகைய செய்திகள் வருகின்றன. ஆனால். அதற்கான முக்கியத்துவம் குறைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதாவால் அதிமுகவின் இன்னொரு முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டு, குறைவில்லாத செல்வாக்கோடு வலம் வந்த...
அண்ணாநகர் டவரில் ஏறினால் பதினாறு நிமிடங்களில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கிவிடலாம். இருநூறு ரூபாய் செலவழித்து ஆட்டோ அமர்த்தினால்கூட இத்தனை சீக்கிரத்தில் போய்ச் சேர முடியாது. அதனால் மெட்ரோவில்தான் தினசரி அலுவலகப் பயணம். உட்கார இடம் கிடைத்தால் புத்தகம் படித்துக்கொண்டு போகலாம். கம்பியைப் பிடித்துக்கொண்டே...
அந்தப் பகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த வழக்கு விவகாரங்கள், சண்டைகள் எதுவும் தேவையற்றவை. இவர்களுக்குள் இதுவரை பிரிவினைகள் எதுவும் வந்ததில்லை.
இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்த புதிய முன்னெடுப்பு தமிழ்நாட்டின் பிற கடலோரப் பகுதிகளிலும் இதுபோன்ற திட்டங்களை உருவாக்கிட மக்களை பெருமளவில் ஊக்கமளிக்கும்.
பொதுமக்களுக்கு விரைவாகச் சேவை வழங்க அரசு அனைத்துச் செயல்பாடுகளையும் ஆன்லைனுக்கு மாற்றியுள்ளது, வரவேற்கக் கூடிய விஷயம். ஆனால் மாற்றம் உருப்படியானதாக இருக்கவேண்டாமா?
ரேடியோ-கார்பன் டேட்டிங் முடிவுகளின்படி, இந்தப் பானை ஓட்டுக் கிறுக்கல்களின் காலம் கி.மு. ஆறிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. ஆனால், அசோக பிராமி எழுத்துகளின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் இருநூறு இடங்களில் ரெட் பட்டன் ரோபோகாப் என்ற நவீன காவல் எந்திரத்தை நிறுவவுள்ளது பெருநகர சென்னை காவல் துறை. இந்த எந்திரத்திலுள்ள சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் உடனடியாகக் காவல் துறையின் உதவியைப் பெறலாம். சென்னை நகரம் அதிகமான மக்கள் அடர்த்திகொண்டதாக உள்ளது. ஆண்-பெண் பேதமின்றி...












