பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் பல வாரங்களாக நடத்தும் போராட்டத்தில் காவலர்கள் தலையிட்டுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பதினேழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொழிற்சாலையில்...
Tag - தொழில்
‘அலுவலக்திற்கு வர வேண்டுமாம். அதுவும் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு. அநியாயம்.’ அமேசான் பணியாளர்களின் ஒருமித்த குமுறல் இதுதான். சென்ற வாரம் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆன்டி ஜெஸ்ஸி தனது அலுவலகச் சொந்தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நீண்ட நெடும் கடிதத்தின் சாரம் இதுதான். வரும்...
ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது. எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை...
வீதிகள் அகலமானதாக இருக்க வேண்டும். அதன் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டுவிடுங்கள். புல்வெளிகளும் தோட்டங்களும் விசாலமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். கால் பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு மைதானங்கள் இருப்பதும் அவசியம். கோயில், மசூதி, தேவாலயங்களுக்கு மறக்காமல் இடம் குறித்து வைக்கவேண்டும். இன்றைய...
6. விட்டாச்சு லீவு! என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனம் வைத்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் சுமார் ஐம்பது பேர் வேலை செய்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் இவர் ஒரு வேலை செய்வார். தன்னிடம் வேலை செய்கிற ஐம்பது பேரும் அந்த ஆண்டில் (அதாவது, ஜனவரி முதல்...
“விவசாயத்துக்குத் தேவையான மம்பட்டி, அருவா, அருவாமனை, பிக்காட்சி (மண் உழும் கருவி), தூம்பா (மண் வெட்டும் கருவி), கோடாரி இது செய்றதுதான் நமக்குத் தொழில். இருவது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். செஞ்ச பொருளைக் கட்டித் தூக்கி பஸ்லயோ, ஆட்டோலையோ கிராமம் கிராமமாப் போய்க் கூவி விப்பேன். ஒரு ஆளு...
செருப்பும்கூட செல்வத்தின் அடையாளம். செருப்பு விற்றே நூறு பில்லியன் டாலர் சம்பாதித்து உலகப் பணக்காரராகி விட்டார். அவர்தான் 61 வயது கிறிஸ்டியன் லொபோட்டின். 40 வருடங்களுக்கும் மேலாகச் செருப்பு தொழிலின் ராஜா. எப்படிச் செருப்பில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கு அவரின்...
வலைப்பூ, யூடியூப், சொந்தமாகத் தயாரித்த பயிற்சித் தொகுப்புகள் மூலம் ஒருவர் தன்னுடைய முப்பத்தெட்டு வயதில் இந்திய மதிப்பில் மாதம் ரூபாய் ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் வாரம் ஐந்து மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கிறார். மற்ற நேரங்களை அவருடைய குடும்பத்திற்காகச்...
கிளாம்பாக்கத்திலொரு பேருந்துநிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்த வெளியூர்ப் பேருந்து நிலையம் அங்கு செல்கிறது. கூடவே இலவச இணைப்பாக உள்ளூர்ப் பேருந்து நிலையத்தையும் துடைத்தெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இந்த மாற்றத்தினால் கோயம்பேடு சந்தை அடிவாங்குமா? 1996-ல் கோயம்பேடு சந்தை...
கலித்தொகைப் பாடலில், பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டிய கதையினைக் குறித்து நாம் படித்திருப்போம். இதிலிருந்து நாம் பெண்களின் வீரம், முறத்தின் உறுதி இரண்டையும் அறிந்து கொள்ளலாம். மூங்கில் பிரம்புகளால் செய்யப்பட்டு வந்த முறங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியமான பொருட்களில் ஒன்று. முறம் இல்லாத வீடு...