கடந்த ஏப்ரல் மாதம் அகமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகக்குழு கூடியது. பல பத்தாண்டுகளாகத் தேசமெங்கும் சுணங்கியிருக்கும் கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவதற்கான முயற்சி அது. அதிகாரம் மேலிருந்து கீழ் நோக்கி இல்லாமல், மாவட்ட அளவில் அதிகாரத்தைப்...
Tag - ராகுல் காந்தி
‘ஹரியானாவில் மிகப் பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது. இரண்டு கோடி வாக்காளர்களில் இருபத்தைந்து லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு கட்டங்களாக...
‘கடந்த ஜூலை 21ஆம் தேதியிலிருந்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை காணவில்லை. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ – இப்படி ஓர் அறிவிப்பை கேரளாவின் காங்கிரஸ் பிரிவு, எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல்...
ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து அறுபத்தைந்து லட்சம் பெயர்கள் நீக்கப்படுவது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. நீக்கப்பட்டவர்களின் பட்டியல், என்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் ஆகியவை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டியலை...
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ராடோ மற்றும் சுமன் துபே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் சுமார் 700 கோடி மதிப்பிலான...
இந்தியாவின் இருபத்தாறாவது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார் ஞானேஷ்குமார். ஆறு ஆண்டுகளுக்கு, தேர்தல் ஆணையத்தின் முகமாக இவர் இருக்கப்போகிறார். இதற்குமுன் இவர் இரண்டு தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்தார். இவரது பதவியேற்பினால் காலியான ஒரு தேர்தல் ஆணையரின் இடத்துக்கு விவேக் ஜோஷி...
நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...
இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம்...
“பிரதமர் மோடி மீது எந்த வெறுப்புணர்வும் இல்லை. அவர் மீது அனுதாபம் தான் ஏற்படுகிறது” என ராகுல் காந்தி தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது பேசியிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த வாரம் அமெரிக்காவுக்குச்...
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள்...













