Home » உரி – 32
உரி நாள்தோறும்

உரி – 32

32. சிந்தையும் சொல்லும்

உதுமானி நாயனார் அவனை மீண்டுமொரு முறை சந்திக்க நேரிடுமென்று முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால் அது நிகழ விதிக்கப்பட்டிருந்தது. ஊர் திமிலோகப்பட்டுக் கிடக்கிறது; தாம் ஒரு நடை வந்து போனால் நன்றாயிருக்குமென்று தாமல் கோட்டத்து வல்ல நாட்டு மாற்பேறிலிருந்து* ஓலை வந்திருந்தது. அம்பலச்சாவடி நியாய சபைகளிலிருந்து* எப்போது அழைப்பு வந்தாலும் தமது மாணாக்கர் யாரிடமாவது விவரம் சொல்லிப் பேசித் தீர்க்க அனுப்பி வைத்துவிடுவார். ஆனால் மாற்பேறிலிருந்து வந்த ஓலையை அவரால் அப்படி எளிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஏனெனில், அனுப்பியிருந்தது, நித்த விநோத நல்லூர் சோளீசப் பெரும்பாணன். மாற்பேறு ஆளுடையார் கோயிலில் நாளெல்லாம் பொழுதெல்லாம் சிவநாமம் பாடிக் களித்து, அது ஒன்றே முக்திக்கு வழியென்ற நெறியில் நின்று திளைப்பவர். தவிர உதுமானி நாயனாரின் சிறு வயதுத் தோழரும்கூட. ஞான வேட்கை மிகக் கொண்டு அவர் கொல்லி மலைக்குப் போய்க்கொண்டிருந்த காலத்தில் ஓரிரு முறை சோளீசப் பாணர் நாயனாருடன் சென்றிருக்கிறார். அவருக்கு அது ஒவ்வொரு முறையும் பொருளற்ற பெரும்பயணமாகவே தோன்றியிருக்கிறது. ஒருமுறை அதை நாயனாரிடம் சொல்லவும் செய்தார்.

உதுமான், என்னைக் கடிந்துகொள்ளாதே. சிவநாமத்தை அறிந்து உச்சரிப்பதினும் ஞானமென்று தனித்த ஒன்றில்லை. அப்படியொன்று இருக்குமானாலும் அது எனக்குத் தேவையில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!