Home » அறுநூறு ரூபாய்க்கு செருப்படி
சமூகம்

அறுநூறு ரூபாய்க்கு செருப்படி

உயர் அதிகாரி வெறுப்பேற்றுகிறார். உடன் பணிபுரிபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். நண்பர்கள் நல்லது செய்வதுபோல நடிக்கின்றனர். காதலித்தவர் ஏமாற்றி விட்டார். என்ன செய்வது? பெரியதாக எல்லாம் வேண்டாம், ஆனால் சுருக்கென்று தைக்கும்படி ஏதேனும் ஒன்று செய்துவிட வேண்டும். எப்படிச் செய்வது? நேருக்கு நேர் நின்று சண்டை போட முடியாத பட்சத்தில்? காகித உருவைச் செருப்பால் அடித்து சாபம் போட்டு விடலாம் என்கின்றனர் வில்லன் ஹிட்டர்ஸ்.

நேர் நின்று மோத முடியாதவர்களுக்குச் செய்வினை வைத்துவிடும் வழக்கம் நம்மூரில் உண்டு. ஏவல், பில்லி, சூனியம் வைப்பதெல்லாம் இப்போதும் இருக்கிறதுதான். ஆனால் அது எங்கோ மூலையில் தலைமறைவாகச் செய்யப்படுகிறது.

இதன் மரு வைத்த மாறுவேடம்தான் ‘டா சியு யான்.’ எதிராளிகளின் காகித உருவைச் செருப்பால் அடிப்பது, மந்திரம் ஓதிச் சாபம் போடுவது. ‘வில்லன் ஹிட்டிங்’ என்று பொருள்படும் இந்தச் சடங்கு நடப்பது எங்கேயோ ஒதுக்குப்புறமான கிராமத்தில் அல்ல, ஹாங்காங்கில். நகரத்தின் மையத்தில் பரபரப்பான சாலைகளின் மத்தியில் நூறாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!