Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 3
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 3

இன்னும் ஒரு ஸ்டீவ்

பன்னிரண்டு வயது ஜாப்ஸின் கையில் ஒரு டெலிஃபோன் டைரக்டரி. கண்கள் பெயரொன்றைத் தேடிக்கொண்டிருந்தன. அப்பெயர் பில் ஹ்யூலெட் (Bill Hewlett). இவர் HP நிறுவனத்தின் CEO.

ஒரு நிறுவனத்தின் தலைவரது எண் எப்படி டைரக்டரியில் இருக்கும் என்னும் ஐயம் எழலாம். அறுபதுகளில் அந்த வேறுபாடெல்லாம் இல்லை. இப்போதிருப்பது போல அன்லிஸ்டட் எண்கள் கிடையாது. எனவே சுலபமாக ஹ்யூலெட்டின் எண் கிடைத்துவிட்டது. வீட்டிலிருந்த தொலைபேசியில் அழைத்தான் ஜாப்ஸ். மறுமுனையில் ஹ்யூலெட்.

இந்த அழைப்பிற்குக் காரணம் ஜாப்ஸ் செய்துகொண்டிருந்த ஒரு புராஜெக்ட். சின்னஞ்சிறு புராஜெக்ட்தான். அதற்கான எலெக்ட்ரானிக் பாகம் ஒன்று தேவைப்பட்டது. HPஇடம் கிடைக்கும் என்று தெரிந்தது.

ஆனால் HPஇல் ஸ்டீவுக்கு யாரையும் தெரியாது. யாரை அழைப்பது என்றும் தெரியவில்லை. அந்த வயதில் ஸ்டீவுக்கு நிறுவனர்களின் பெயர்கள் தெரிந்திருந்ததே அதிகம்.

அழைத்தால் எடுப்பார்களா? கடிந்துகொள்ள மாட்டார்களா? கேட்டது கிடைக்குமா? இது போன்ற எந்தத் தயக்கமும் ஜாப்ஸுக்கு இல்லை. நினைத்தது நடக்கவேண்டும். அதற்குத் தன் முன் இருக்கும் ஒரே வழி இதுதான். ஜாப்ஸ் எறிந்த கல்லில் பழம் விழுந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!