Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 13
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 13

யார் லிசா?

ஆப்பிளின் விற்பனை தொடர்ந்து அதிகரித்தது. ஆப்பிள் II கம்ப்யூட்டருக்கான ஆர்டர்கள் தொய்வின்றி வந்துகொண்டிருந்தன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து ஏழாம் ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து ஐநூறு கம்ப்யூட்டர்களை விற்றது ஆப்பிள்.

அன்றைய சூழலில் இத்தனை கம்ப்யூட்டர்கள் விற்பது என்பதே ஒரு சாதனை. அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை பன்மடங்கு பெருகியது. எண்பத்தொன்றாம் ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கம்ப்யூட்டர்களை விற்றது ஆப்பிள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஜாப்ஸ் எப்போதும் போலப் பரபரப்பாகவே இருந்தார். அவரை ஒரு கேள்வி அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஆப்பிள் II நல்ல கம்ப்யூட்டர்தான். ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு எத்தனை காலம் ஓட முடியும்?

என்ன இருந்தாலும் ஆப்பிள் II, வாஸ் செய்த கம்ப்யூட்டர். தனது பெயர் சொல்லும் ஒரு கம்ப்யூட்டரை வடிவமைத்துவிட வேண்டும் என்பதில் ஜாப்ஸ் உறுதியாக இருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!