Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -18
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் -18

சொல்லின் செல்வர்

ரஸ்கின் இல்லை. எனவே மேக்கிண்டோஸ் ஜாப்ஸ் வசமாகியிருந்தது. தனது மேக் குழுவுக்கு ஆள் பிடித்துக்கொண்டிருந்தார் ஜாப்ஸ். ரஸ்கினிடம் இருந்தது ஒரு சின்னஞ்சிறு குழு. அவரது ஆசையும் சிறியது. பட்ஜெட்டும்.

ஜாப்ஸுக்கு அவ்வாறான தடைகள் இல்லை. அவரைப் பொறுத்தவரை பெரிதினும் பெரிது கேள் என்பார். பெரிது என்றால் அளவு அல்ல. தரம்.

தனது குழுவுக்காக ஆப்பிளின் ஆகச்சிறந்த பணியாளர்களைப் பொறிவைத்துப் பிடிக்கத்தொடங்கினார் ஜாப்ஸ். பொறியாளர்களைப் பிடிக்கும் பொறி.

அவ்வரிசையில் அவர் பார்வைக்கு வந்த முதல் நபர் ஆண்டி ஹெர்ட்ஸ்ஃபெல்ட் (Andy Hertzfeld). இவர் ஆப்பிள் II டீமில் இருந்தவர்.

ஜாப்ஸின் தேடுதல் வேட்டையை ஆண்டியும் அறிந்திருந்தார். நண்பர்கள் ஆண்டியை எச்சரித்திருந்தனர். ஜாப்ஸ் உன்னைத் தேடிக் கட்டாயம் வருவார், உன்னை நிச்சயம் விடமாட்டார் என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!