பெப்சி ராணி சென்ற ஆண்டில் ஒருநாள். அலுவலகத்தில் நானும் எனது சக ஊழியரும் பணி சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எமது நிறுவனத்தின் சட்ட வல்லுநர்களில் ஒருவர் வந்து எம்மிருவரிடமும் பேச வேண்டுமென்றார். நாங்களும் எமது நான்கு செவிகளையும் அவர் சொல்லப் போவதைக் கேட்கத்...
Author - ந. ஜெயரூபலிங்கம்
![]()
அறிமுகம் உலகத் தொழில்நுட்ப நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் அதிகப் பெறுமதி கொண்ட மூன்று நிறுவனங்கள் எவை..? ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அல்ஃபாபெட் ஆகியவையே முன்னணியில் நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்கள் ஒவ்வொன்றின் பெறுமதியும் சில டிரில்லியன் டாலர்களில் உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களில் இரண்டின் இன்றைய...
செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில்...
ட்விட்டர் கணக்கின் பக்கத்தில் “ப்ளூ டிக்” என்று அறியப்படும் நீலக் குறியீடு அந்தக் கணக்கின் சொந்தக்காரரை உறுதிப்படுத்தும் அடையாளமாகும். நிறுவனங்களினதும் பிரபலங்களினதும் உத்தியோகப் பூர்வக் கணக்கை அடையாளம் காண்பதற்கு இந்த ப்ளூ டிக் பயனுள்ளதாக இருந்தது (இது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இதர சமூக...
அந்தத் தெருவின் பெயர் லெட்ரா ஸ்ட்ரீட். அங்கே சாலையின் நடுவே ஒரு எல்லைச் சாவடி. அதனை அண்மிக்கும் போது ஒரு அறிவிப்புப் பலகை. அதில் “போலிப் பொருட்களைக் எமது நாட்டுக்குள் கொண்டு வருவது குற்றச் செயலாகும்” எனும் அர்த்தத்தில் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டிருந்தது. “எல்லைக்கப்புறம் போலிப் பொருட்கள் வாங்க...
புதிய பிரதமரும் பழைய சவால்களும் பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்கிறார். ஒரு விதத்தில் இது வரலாற்றுச் சம்பவம். 2022ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து பிரிட்டனில் ஏகப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் நடக்கின்றன. கிரகங்களின் சஞ்சாரம் அப்படி போலிருக்கிறது. முதலில் ராணியின் மரணம். அதைத் தொடர்ந்து...
கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமும் மெல்லிய தோற்றமும் கொண்ட எழுபதியேழு வயதுப் பெண். இவர் உருவத்தைக் கண்டு யாரும் பயப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இவர் கடந்த பல காலமாகச் சிறையில் இருக்கிறார். இவர்மேல் தொடரப்பட்ட சில வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனாலும் இன்னும் சில முடிவுக்கு வராத வழக்குகளில்...
அக்டோபர் 6ம் தேதி 2022ம் ஆண்டு இலக்கியப் பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்றவர் எண்பத்திரண்டு வயதான ஆனி ஏர்னோ (Annie Ernaux) எனப்படும் பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர். இவர் பிரான்சில் மிகவும் பிரபலமான எழுத்தாளர். 2019 புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்...
புதிய பிரிட்டிஷ் பிரதமராக லிஸ் டிரஸ் பதவி ஏற்ற இரண்டாவது நாளே எலிசபெத் ராணி பரலோகம் போய் விட்டார். உலகமே அதிர்ச்சி அடைந்தது. என் பாட்டி உயிரோடு இருந்திருந்தால் இவள் வந்த ராசி ராணி போயிட்டா என்று சொல்லியிருப்பார். நான் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன். இது ஒரு இயற்கையான சம்பவம். புதிய பிரதமரின்...
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதக்கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. பொதுவாக அவற்றுக்கு அரசியல்வாதிகள் காரணமாக இருப்பார்கள். சமயத்தில் மக்களும். இந்த மாதம் இங்கிலாந்திலும் மதம் சார்ந்த கைகலப்புகள் நடைபெற்றன. அதுவும் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியோரின்...














