“இந்த அரசு எந்த நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. திராவிட மாடல் அரசு என்றாலே மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கு நினைக்காத அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்கும் அரசு என்று தான் பொருள். சக்தித் தலங்கள் தரிசனம், அறுபடை வீடுகள் தரிசனம், காசி யாத்திரையென அனைத்தையும் ஏற்பாடு செய்யும் அரசு இது. இதன் மூலம்...
Author - நா. மதுசூதனன்
![]()
ஒரு திட்டம் அல்லது கணக்கு தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு அதைத் தொடங்குவது வழக்கம். தமிழக அரசியலைப் பொறுத்த வரை கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் திமுக, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாகட்டும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தேர்தல்...
வாரணாசியில் அரசு அதிகாரியாக இருந்த அந்த ஆங்கிலேயரின் பெயர் பிராம்லி. அங்குள்ள ஒரு பூங்காவில் தனது மனைவியுடன் மாலை நடைப்பயிற்சியில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு சாமியார் நிர்வாணமாகத் திகம்பரத் தோற்றத்தில் அவர்களைக் கடந்து சென்றார். தனது மனைவியுடன் நடந்து வரும்பொழுது இப்படியொரு ஆள் கடப்பது...
மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது வழிபாட்டு முறைகள் குறித்து விசாரிக்கிறான். அவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வம் என்று கூறுவது நீல மாதவர் என்ற ஒரு தெய்வத்தை. அவர் யார் என்பது இன்னும்...
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது செவ்வக வடிவிலான மஞ்சள்நிறப் பெட்டி தான். அந்தத் தகரப்பெட்டியில் உள்ள பொருட்கள் சில. காம்பஸ், கவராயம் எனச் சொல்லப்படும் டிவைடர், கோணங்களை அளக்க உதவும் பிளாஸ்டிக் அளவீடுகள் (கோணமானி) இரண்டு. இது தவிர...
ஒவ்வொரு நாளும் செல்போனின் அட்டகாசம், குழந்தைகளின் கவனக்குறைவு, அதனால் விளையும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து மட்டுமே அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியிருக்கையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு சோதனை இதில் வேறொரு கோணத்தைக் காட்டியிருக்கிறது. அவர்கள் சொன்ன கடைசிக் கருத்துதான் விவாதத்திற்குரியது...
தமிழ் சினிமாவின் ஆதிகால சூப்பர் ஸ்டாருக்கு இது நூற்றாண்டு நேரம். ‘ஆதித்தன் கனவு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்தக் கதாநாயகரின் மேல் மக்கள் கல்லெறியும் காட்சி ஒன்று இருந்தது. அந்தப் படத்தில் துணை நடிகராக நடிக்க வந்த ஒரு நடிகர் தனது ஆதர்ச நடிகர் மற்றும் பாடகர்மீது கல்லெறிய முடியாது என...
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்தது இன்றைய கிருஷ்ணா மாவட்டம். அந்த மாவட்டத்தில் உள்ள பெதபருபுடி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த அச்சிறுவன் சாதாரணமாகப் பிறந்து, வாழ்ந்து, செல்வதற்காகத் தான் பிறக்கவில்லை என்பதை உணர்ந்திருந்தான். சிறு வயதிலேயே ஊறுகாய்ப் போத்தல்களை வீடு வீடாகச்...
இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று...
“என் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். நோட்டீஸ் வந்திருக்கிறது. அது பாட்டுக்கு இருக்கட்டும். அதற்காக அவர்களைப் பள்ளியை விட்டு நிறுத்தப் போவதில்லை. எங்களுக்குத் தல தோனியைப் பார்க்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு சி.எஸ்.கே.தான் எல்லாம். அதனால்தான் குடும்பத்துடன் ஐ.பி.எல். பார்க்க...














