மாதச் சந்தாக்கள்
பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் பாடல், ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’. அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, அளவுக்கு மீறி மாதத் தவணையில் வாங்குவதைக் கண்டித்த வரிகள் அவை. இன்று கடனைத் தாண்டி மாதச் சந்தாவில் நாம் வாங்கும் இணையச் சேவைகளுக்கு இதே வரிகள் பொருந்தும். இந்தச் சந்தாக்கள் நல்லவையா கெட்டவையா?
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ்களுக்கும் பத்திரிகைகளுக்கும் சந்தா கட்டி வந்திருக்கிறோம். பிறகு 90களில் கேபிள் தொலைக்காட்சி சந்தா தொடங்கியது. அதற்கு மாதம் சுமார் நூறு ரூபாய்க்கும் குறைவாகக் கட்டினோம்.
இந்தியாவில் இணையச் சந்தா சேவைகளின் ஆரம்பம் என்றால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வி.எஸ்.என்.எல் இணையச் சேவையைச் சொல்ல வேண்டும். 1995ஆம் ஆண்டு இந்த அரசு நிறுவனம் இந்தியச் சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு இணையச் சேவையைத் தொடங்கியது.















Add Comment