Home » அடியில் உறங்கும் ஆபத்து
இயற்கை

அடியில் உறங்கும் ஆபத்து

பிரதான இமயமலைப் பிளவுப் பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் மெகா நிலநடுக்க ஆற்றல் தேங்கியுள்ளதாக ‘Earth and Planetary Science Letters’ இதழ் தெரிவித்துள்ளது. ஐரோப்பியப் புவி அறிவியல் கூட்டமைப்பும் (EGU) இதனை எச்சரித்துள்ளது. அமைதியாகத் தோன்றும் பனிமலைகளுக்கு அடியில் மாபெரும் பேராபத்து எவ்வாறு திரண்டு வருகிறது?

இந்த ஆபத்தைப் புரிந்துகொள்ள, பூமியின் அமைப்பையும் இமயமலை உருவான விதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் வாழும் பூமியின் மேற்பரப்பு ஒரே பாறையால் ஆனதல்ல. அது பல பெரிய தட்டுகளாகப் பிரிந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள வெப்பக் குழம்பின் மேல் இவை மிதக்கின்றன. இவற்றுக்குப் புவித் தட்டுகள் (Tectonic Plates) என்று பெயர். இந்தப் புவித் தட்டுகள் ஆண்டுதோறும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. சில சென்டிமீட்டர்கள் நகர்ந்தாலும், இந்த இயக்கம் பூமியின் நிலப்பரப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!