தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமாம் என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. ஓரிடத்தில் நடக்கும் பிரச்சனைக்கும், அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறோரிடத்தில் ஏற்படும் விளைவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகக் கிண்டலாக இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள். விலைவாசி உயர்வுக்கும் இது முற்றிலும் பொருந்தும்.
விலை உயர்வினைக் கட்டுக்குள் வைப்பதற்காக வரையறுக்கப்படும் கோட்பாடுகள், திட்டங்கள், செயல்பாடுகளின் எல்லைகளுக்குள் விலைவாசி எப்போதும் அகப்படுவதேயில்லை. சட்டென ராக்கெட் வேகத்தில் பறந்து சென்று மேலே நின்று பொதுமக்களைப் பார்த்துப் பழிப்புக் காட்டுவதே அதன் வாடிக்கை. மக்களின் நிலைமைதான் பரிதாபம். சாதாரண நாள்களில் ஏற்படும் விலைவாசி உயர்வை விட, பண்டிகைக் காலங்களில் ஏற்படும் உயர்வு பொதுமக்களுக்கு இருமடங்கு தண்டனை.
ஆடி அழைத்துக் கொண்டுவரும் என்பார்கள். அதாவது, ஆடி மாதம் பிறந்தவுடன் எல்லாவிதப் பண்டிகைகளும் வரிசைக்கட்டிக் கொண்டு தொடர்ந்துவரும். கையில் இருக்கும் சேமிப்பு கரைய ஆரம்பிப்பதும் இந்த காலகட்டத்தில்தான்.















Add Comment