காத்தவராயன்
நள்ளிரவு. குதிரைகளின் குளம்பொலிகளால் காடு அதிர்ந்தது. பயத்தில் விலங்குகளும் பறவைகளும் அலறின. தீப்பந்தங்களுடன் இருநூறு வீரர்கள் காத்தவராயனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கையில் வாள். இன்னொரு கையில் வில். முதுகில் அம்புக்கூடு. காத்தவராயனின் குதிரை காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. காடறிந்த குதிரை. புதர்கள், மேடு பள்ளங்கள், ஓடைகளை லாகவமாகத் தாண்டிச் சென்றது.
‘அவனை உயிருடன் பிடியுங்கள், அரசரின் உத்தரவு.’ காத்தவராயன் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தான்.
‘அரசன் ஒரு பயந்தாங்கொள்ளி போல. என்னைப் பிடிக்க இத்தனை பேரை அனுப்பியிருக்கிறான்.’
குதிரை ஓடிக் கொண்டிருக்க, பின்னால் திரும்பி வில்லில் அம்பை எய்தான். ஒரு வீரனின் கையில் இருந்த வாள் தெறித்தது. அடுத்தடுத்து அம்புகள் வரிசையாகத் தரையில் குத்தி நின்றன. குதிரைகள் தடுமாறி விழுந்தன. காத்தவராயன் காட்டில் மறைந்தான்.
இத்தனை வீர வித்தைகளும் கற்றுத் தேர்ந்த காத்தவராயன், ஆரியமாலைக்காக ஓடிக் கொண்டிருக்கிறான்.
மூன்று மாதங்கள் முன்பு, ஆரியமாலை தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டு காட்டு வழியில் வந்து கொண்டிருந்தாள். அருகில் ஒரு புதரிலிருந்து சலசலப்பு.















Add Comment