இஸ்ரேலில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி, தங்களது கெனசெட் (Knesset) நாடாளுமன்ற அவையைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தனர் இஸ்ரேலியர்கள். கெனசெட் மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்டது. அதற்கு நான்காண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும்.
இந்தியா போலவே இஸ்ரேலிலும் நாடாளுமன்றத்துக்கு ஜனநாயக வாக்கெடுப்பு முறைதான். ஆனால், இஸ்ரேல் தொகுதி வாரியாகப் பிரிக்கப்படவில்லை. நாடு முழுவதும் ஒரே தொகுதியாகக் கருதப்படுகிறது. அங்கிருப்பது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை. ஒரு கட்சி பெறும் வாக்குகளின் விகிதத்தைப் பொறுத்து அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அமையும். பதிவாகும் வாக்குகளில், ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் 3.25% வாக்குகளாவது பெற்றால்தான் கெனசெட்டுக்குள் நுழைய முடியும். அந்த வரம்புக்குக் கீழே உள்ள கட்சிகளும் அவர்கள் பெற்ற வாக்குகளும் நிராகரிக்கப்படும்.
மேலும், இஸ்ரேலியர்கள் கெனசெட் உறுப்பினர்களையோ பிரதமரையோ நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்கள் எந்தத் தனி வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை. மாறாக, பங்கேற்கும் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலுக்கு வாக்களிப்பார்கள்.















Add Comment