Home » தடைக்கு வேண்டும் தடை
புத்தகம்

தடைக்கு வேண்டும் தடை

‘ஒழுக்கமற்றவை என்று உலகம் அழைக்கும் புத்தகங்கள், உலகுக்கு அதன் சொந்த அவமானத்தைக் காட்டும் புத்தகங்களாகும்.’ – ஆஸ்கர் ஒயில்ட்.

புத்தகங்களை நேசிப்பவர்கள் போலவே புத்தக வெறுப்பாளர்களும் உலகெங்கும் உள்ளனர். இவர்கள் வாசிப்பை வெறுப்பவர்கள் அல்லர். ஆனால் குறிப்பிட்ட சில புத்தகங்களைக் குறிவைத்துத் தாக்குவார்கள். தங்களுக்குப் பிடிக்காத கருத்துகளையும் ஒவ்வாத கொள்கைகளையும் அவை பரப்புவதாகக் குற்றம் சாட்டுவார்கள். அப்புத்தகங்களைத் தடை செய்யப் போராடுவார்கள். புத்தகங்களையும், முடிந்தால் அதன் எழுத்தாளர்களையும் கொளுத்திடத் துடிக்கும் கலாசாரக் காவலர்களாக உருமாறி நிற்பார்கள்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிரான இரானின் ஃபத்வா ஞாபகமிருக்கிறதா? 1989 முதல் அவரைத் துரத்திய ஃபத்வா, 2022ஆம் ஆண்டு அவரது ஒரு கண்ணின் பார்வையைப் பறித்த கத்திக்குத்து வரை வந்துள்ளது. பங்களாதேஷி எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தொடங்கி தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன் வரை பல உதாரணங்களைச் சொல்லலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!