சகோதரிகள் இருவர், இங்கிலாந்தில் ஒரு தீவை விலைக்கு வாங்கினர். பின்னர் அந்தத் தீவையே தங்கள் வாழ்விடமாக அமைத்துக்கொண்டனர். தங்களுக்குப் பிறகும் அதன் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க விரும்பி ஓர் அறக்கட்டளைக்கு உயிலாக எழுதி வைத்தனர். இன்று அந்தத் தீவு, ஏராளமான கடற்பறவைகள், பட்டாம்பூச்சிகளின் புகலிடமாக விளங்குகிறது.
பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்போது அல்லது அன்றாடச் சுழற்சி சலித்துப் போகும்போது எங்காவது கண்காணாத தீவுக்கு ஓடிவிட வேண்டும் என்று பலர் கனவு காண்பார்கள். அந்தக் கனவை இங்கிலாந்தைச் சேர்ந்த சகோதரிகள் ஈவ்லின் அட்கின்ஸும், ரோஸலின் அட்கின்ஸும் நனவாக்கிக் கொண்டார்கள்.
1965ஆம் ஆண்டு சுமார் இருபத்து இரண்டாயிரம் பவுண்டு விலையாகக் கொடுத்து, கார்ன்வால் கடற்கரைக்கு அருகிலுள்ள ‘லூ தீவை’ (Looe Island) வாங்கினார்கள். தீவின் பரப்பளவு ஏறத்தாழ 22 ஏக்கர்.















Add Comment